/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்காளம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை அங்காளம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
அங்காளம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
அங்காளம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
அங்காளம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : ஜூலை 09, 2024 03:51 AM
புதுச்சேரி : அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் பிரசித்திப் பெற்ற, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 43வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை வரும் ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடக்கிறது.
அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 3:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரையிலும் ஒரு லட்சம் முறை அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
காலை 7:00 மணிக்கு ஆரம்பித்து, இரவு 9:00 மணி வரை நடக்கும் இந்த லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்புபவர்கள் கோவில் அலுவலகத்தில் ரூ.450 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.