ADDED : ஜூலை 04, 2024 10:11 PM

புதுச்சேரி, : காணாமல் போன முதியவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாராயணன், 60; இவர் கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.