/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர். காங்., - பா.ஜ., மோதல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'திடுக்' என்.ஆர். காங்., - பா.ஜ., மோதல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
என்.ஆர். காங்., - பா.ஜ., மோதல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
என்.ஆர். காங்., - பா.ஜ., மோதல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
என்.ஆர். காங்., - பா.ஜ., மோதல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
ADDED : ஜூன் 18, 2024 04:49 AM
புதுச்சேரி: தமிழ் சமூகத்தை குறை கூறியுள்ள தலைமை செயலர் குறித்து, கட்சித்தலைமையுடன் பேசி அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்போம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி முதல்வர் பங்கேற்றனர். ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியேற்பு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதிலிருந்து பா.ஜ.,விற்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் கருத்து வேறுபாடா, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அனைத்து மாநில பா.ஜ., முதல்வர்களும், கூட்டணிக் கட்சி முதல்வர்களும் பங்கேற்ற நிலையில் ரங்கசாமி மோடியின் பதவியேற்பை புறக்கணித்தது கேள்விக்குறியாகவே உள்ளது. ரங்கசாமி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ரகசிய பேச்சுவார்த்தை, கட்சித் தலைவருக்கு வைத்த கோரிக்கைகள், அவசரமாக எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை முதல்வர் விருந்துக்கு அழைத்தது எல்லாம் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் பிரச்னை நடந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்ததையடுத்து ஆய்வுக்குழு கூட்டத்தில் தலைமைச்செயலர் தமிழர்கள் திறமையில் குறைந்தவர்கள் என அதிகாரிகள் மத்தியில் பேசியுள்ளார். தலைமைச்செயலர் தமிழ் சமூகத்தை குறை கூறியுள்ளது பற்றி கட்சித்தலைமையுடன் பேசி அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம்.
விஷவாயு விவகாரத்தில் நிரந்தர தீர்வுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிபுணர் குழு வந்து பார்த்து மாற்று நடவடிக்கை எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆய்வுக்குழு வந்தால்தான் பரிகாரம் கிடைக்கும். ஆட்சியாளர்கள்தான் இதற்கு பொறுப்போ ஏற்க வேண்டும்.
ரெஸ்டோ பார் தொடர்பாக கூட்டணியிலுள்ள பா.ஜ., அமைச்சர் சாய் சரவணன்குமார் கவர்னரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் முதல்வரிடம் மனு தரவில்லை. முதல்வருக்கும் அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. பள்ளி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை மூட இனியாவது முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.