/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை
தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை
தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை
தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை
ADDED : ஜூன் 08, 2024 05:33 AM
பண்ருட்டி,: சொத்து தகராறில் தாத்தா,பாட்டியை தாக்கிய பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை வி.பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்,90; இவரது மனைவி தனலட்சுமி,80; இருவரும், வேகாக்கொல்லை சக்கரவர்த்தி என்பவரின் முந்திரி தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அவர்களது மகன் வழி பேரன் பரணிதரன், வீட்டு மனையை பிரத்து தரக் கேட்டு இருவரையும் தாக்கினார். அதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, பரணிதரனை தேடி வருகின்றனர்.