/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அந்தஸ்தை மறந்து விட்டனர் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு மாநில அந்தஸ்தை மறந்து விட்டனர் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்தை மறந்து விட்டனர் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்தை மறந்து விட்டனர் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்தை மறந்து விட்டனர் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 08, 2024 04:56 AM
புதுச்சேரி : 'புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதால் பா.ஜ.,- என்.ஆர்.காங்., கூட்டணி தோல்வியை சந்தித்தது' என, நேரு எம்.எல்.ஏ., கூறினார்.
அவர் கூறியதாவது;
முதல்வர் ரங்கசாமி கட்சி தொடங்கிய காலத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தினார். பா.ஜ., கூட்டணி ஆட்சியில் மாநில அந்தஸ்து பற்றி பேசவில்லை. பொதுநல அமைப்புகளின் அழுத்தம் காரணமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினர். இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் இல்லை.
புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் சேர்க்காதது மற்றும் மாநில கடன் தள்ளுபடி செய்யாததால், அரசு நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. மின்துறை தனியார் மயமாக்கல், காலி பணியிடம் நிரப்பாததால், மக்களின் வெறுப்புக்கு ஆளாகினர்.
எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகளால் இந்திய அளவில் புதுச்சேரி கடைசி இடத்திற்கு சென்றது. புதுச்சேரி முழுதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல், நிலத்தடி நீரை உருஞ்சும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தனர். ரெஸ்டோ பார்களை தெருவுக்கு தெரு திறந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தனர். புதுச்சேரி கடலுார் ரயில் பாதை திட்டம் நிறைவேற்றவில்லை.
கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டத்தால் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாததால், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி லோக்சபா தேர்தலில் படுதோல்வி சந்தித்துள்ளது.
இனியாவது தவறுகளை உணர்ந்து மக்கள் விரோத செயல்களை நிறுத்தி மீதமுள்ள 2 ஆண்டுகள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி ஆட்சி செய்ய வேண்டும்' என்றார்.