/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னரின் பட்ஜெட் உரை சிவசங்கர் எம்.எல்.ஏ., பாராட்டு கவர்னரின் பட்ஜெட் உரை சிவசங்கர் எம்.எல்.ஏ., பாராட்டு
கவர்னரின் பட்ஜெட் உரை சிவசங்கர் எம்.எல்.ஏ., பாராட்டு
கவர்னரின் பட்ஜெட் உரை சிவசங்கர் எம்.எல்.ஏ., பாராட்டு
கவர்னரின் பட்ஜெட் உரை சிவசங்கர் எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : மார் 12, 2025 06:39 AM
புதுச்சேரி : கவர்னர் உரையின் மீதான தீர்மானத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது:
கவர்னர் கைலாஷ்நாதன் சிறந்த உரையை சட்டசபையில் சமர்ப்பித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வார திட்டம் ரூ.4,750 கோடியில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கல், கழிவுநீர், வடிகால் கூறுகள் தொடர்பாக ரூ.3,290 கோடிக்கான திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது கவர்னரின் உரையில் சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது. மேலும் ராஜிவ் - இந்திரா சிக்னல் இடையே 1,000 கோடிக்கு உயர்மட்ட பாலம் கட்டவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும் கவர்னர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் காரைக்காலில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக மத்திய அரசு 120 கோடியை ஒதுக்கியுள்ளதாக கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
78 குளங்களை துார்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது சிறந்த முடிவு. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2020-21 ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.1,868ல் இருந்து 2,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் கவர்னர் உரையில் புதுச்சேரி வளர்ச்சிக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார். அதற்கு 24 மணி நேரமும் கவர்னர் கைலாஷ்நாதன் உழைத்து வருகிறார். அவருக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.