Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி

கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி

கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி

கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி

ADDED : மார் 12, 2025 06:39 AM


Google News
புதுச்சேரி : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது:

கவர்னர் தனது உரையில் அரசின் பல சாதனைகளை குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி.

முதியோர் உதவித் தொகை தற்போது சரியான நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது.

அரியாங்குப்பம் தொகுதியில் குடிநீர் தரமின்றி உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொகுதிக்கு உட்பட்ட முருங்கப்பாக்கம் ஆறு படகு சவாரி செய்யும் இடமாக இருந்து வந்தது.

இந்த ஆற்றை துார் வார நடவடிக்கை எடுத்ததற்கும், மரப்பாலத்தில் இருந்து கடலுார் சாலையில் 20 கி.மீ., துாரத்திற்கு சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்ததற்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us