/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏனாமில் கூடுதல் மின் கட்டணம் தடுக்க எம்.எல்.ஏ., கோரிக்கை ஏனாமில் கூடுதல் மின் கட்டணம் தடுக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ஏனாமில் கூடுதல் மின் கட்டணம் தடுக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ஏனாமில் கூடுதல் மின் கட்டணம் தடுக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ஏனாமில் கூடுதல் மின் கட்டணம் தடுக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2024 12:43 AM
புதுச்சேரி: ஏனாம் மக்கள் மீதான கூடுதல் மின் கட்டண சுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என, முதல்வருக்கு கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தொம்மேட்டி பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மின் திருட்டு நடந்துள்ளது. அதை தாமதமாக கண்டறிந்த அதிகாரிகள், தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்த தொழிற்சாலை மூலம் நடந்த கோடிக்கணக்கான மின் திருட்டை தொடர்ந்து அத்தொகை ஏனாம் தொகுதி மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணமாக மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது.
இதனால் மின் கட்டணச் சுமை மேலும் அதிகரித்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். யாரோ செய்த தவறுக்கு தங்களை பொறுப்பாக்குவது எந்த வகையில் நியாயம் என ஏனாம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஐந்து ஆண்டுகளாக இந்த சர் சார்ஜ் சுமத்தப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.