/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டையில் மாயமான இளம்பெண் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் கடத்தியதாக தந்தை புகார் லாஸ்பேட்டையில் மாயமான இளம்பெண் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் கடத்தியதாக தந்தை புகார்
லாஸ்பேட்டையில் மாயமான இளம்பெண் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் கடத்தியதாக தந்தை புகார்
லாஸ்பேட்டையில் மாயமான இளம்பெண் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் கடத்தியதாக தந்தை புகார்
லாஸ்பேட்டையில் மாயமான இளம்பெண் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் கடத்தியதாக தந்தை புகார்
ADDED : ஜூன் 18, 2024 04:42 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் மாயமான இளம்பெண்ணை ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் கடத்தி சென்றிருக்கலாம் என அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர், அன்னை இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்தவர் ௨௪ வயது பட்டதாரி பெண். இவருக்கு இவரது பெற்றோர் வரன் பார்த்து ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் துாங்கிய பட்டதாரி பெண் மறுநாள் காலை மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை லாஸ்பேட்டை போலீசில் அளித்துள்ள புகாரில், மகள் மாயமான அன்று வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி.யை ஆய்வு செய்தபோது, காரைக்கால் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரின் மகன் வந்து செல்வது பதிவாகி உள்ளது.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், என் மகளின் விருப்பதிற்கு மாறாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார். அதன்படி, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.