/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஷவாயு தாக்கிய விவகாரம் துறை ரீதியாக நடவடிக்கை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல் விஷவாயு தாக்கிய விவகாரம் துறை ரீதியாக நடவடிக்கை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
விஷவாயு தாக்கிய விவகாரம் துறை ரீதியாக நடவடிக்கை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
விஷவாயு தாக்கிய விவகாரம் துறை ரீதியாக நடவடிக்கை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
விஷவாயு தாக்கிய விவகாரம் துறை ரீதியாக நடவடிக்கை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ADDED : ஜூன் 12, 2024 07:22 AM
புதுச்சேரி : விஷ வாயு தாக்கி 3 பேர் இறந்த விவகாரத்தில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
அவர், கூறியதாவது;
ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறை மூலம் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் இறந்தனர். இந்த விஷ வாயுவின் தன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். யார் மீது தவறு உள்ளது என துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறையில், கொடுக்கப்பட இணைப்பு முறை, இந்த வாயு எத்தனை நாள் தேங்கியுள்ளது. கடைசியாக கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யப்பட்டது போன்ற விபரங்கள் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு வராமல் இருக்க இயற்கையான பாக்டீரியாக்கள் போடப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்லும் பாதையில் எந்த இடத்தில் அடைப்பு இருக்கிறது என, சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷ வாயு வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
அதையும் கருத்தில் கொண்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதனை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தனியார் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தை நல்ல முறையில் பராமரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.