/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி அரியூர் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி அரியூர் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி அரியூர் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி அரியூர் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி அரியூர் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை
ADDED : ஜூன் 05, 2024 03:01 AM

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சமூக மருத்துவ துறை சார்பில் அரியூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி சேர்மன்இராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு குடும்ப தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், அரியூர் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மருத்துவ முகாமை வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர். வித்யா, மருத்துவ கல்லுாரி இயக்குனர் டாக்டர். இரத்தினசாமி ஆகியோர் தலைமை தாங்கி துவக்கிவைத்தனர்.
கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் அனைவருக்கும் பரிசோதனை நடந் தது. அதில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்த சோகை, கண்புரை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை கண்டறிந்தனர். பரிசோதனை முடிந்த வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சமூக மருத்துவத்துறை தலைவி டாக்டர். பரதலட்சுமி தலைமையில் டாக்டர் சுரேந்தர், மருத்துவ பேராசிரியர்கள்மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்தனர்.