/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிதிசார் தொழில்நுட்பத்தினை செயல்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிதி திரட்டல் நிதிசார் தொழில்நுட்பத்தினை செயல்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிதி திரட்டல்
நிதிசார் தொழில்நுட்பத்தினை செயல்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிதி திரட்டல்
நிதிசார் தொழில்நுட்பத்தினை செயல்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிதி திரட்டல்
நிதிசார் தொழில்நுட்பத்தினை செயல்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிதி திரட்டல்
ADDED : ஜூன் 05, 2024 03:02 AM

புதுச்சேரி: நிதிசார் தொழில்நுட்பத்தினை செயல்படுத்த தட்ஷசீலா பல்கலைக்கழகம்,பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
புதுச்சேரி அடல் இன்குபேஷன் சென்டர் சேவையைப் பெற்ற பின்டெக் துறையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ரூ.30 லட்சம் தொகையை தட்ஷசீலா பல்கலைக்கழகத்திடமிருந்து வெற்றிகரமாக நிதி திரட்டியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் நிதிசார் தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது.
இதில்,தட்ஷசீலா பல்கலைக்கழகம் முன்னோடியாக இப்போது இணைந்துள்ளது.பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கார்டு மூலம்,தட்ஷசீலா பல்கலைக்கழகம் வளாகத்தில் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது. பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ரவி பிரசாந்த் சிந்தா கூறும்போது, தட்ஷசீலா பல்கலைக்கழகத்திடமிருந்து இந்த ஆதரவைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.இது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இந்த நிதியளிப்பு மிக நவீன பேமெண்ட் தீர்வுகளை சந்தைக்கு எடுத்துச்செல்லும் என்று குறிப்பிட்டார்.
அடல் இன்குபேஷன் சென்டர் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு வரதன் பேசும்போது, இந்த முதலீடானதுபுதுச்சேரியில் வளர்ந்து வரும் இளம் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பிற்கு உத்வேகமும், நம்பிக்கையும் அளிக்கும்.உள்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக முதலீடு செய்வதற்கான சாத்தியத்திறனை இது எடுத்துக்காட்டுகிறது.
இதன்மூலம் இப்பிராந்தியத்தில் தொழில்முனைவுக்கான சூழல் அமைப்பை பேணி வளர்க்க முடியும் என்று குறிப்பிட்டார்.