ADDED : ஜூலை 10, 2024 04:47 AM

புதுச்சேரி, : புதுச்சேரி நலவழித்துறை, தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் முருகன் வரவேற்றார். பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி, ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா ஆகியோர் தலைமை தாங்கி, மலேரியா குறித்த பேச்சு போட்டியை துவக்கி வைத்தனர். மலேரியா எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார உதவி யாளர்கள் சிவக்குமார், ஜெகநாதன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை ரேணுகா தேவி நன்றி கூறினார்.