/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குற்றவியல் சட்ட குளறுபடிகளை நீக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல் குற்றவியல் சட்ட குளறுபடிகளை நீக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
குற்றவியல் சட்ட குளறுபடிகளை நீக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
குற்றவியல் சட்ட குளறுபடிகளை நீக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
குற்றவியல் சட்ட குளறுபடிகளை நீக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 04:43 AM

புதுச்சேரி, : புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கி, திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு;
லோக்சபாவில் இயற்றப் படும் எந்த சட்டமும் ஆங்கிலத்தில் இயற்ற வேண்டும் என, இந்திய அரசியலமைப்பு சட்டம், 348, வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் இந்த சட்டங்களுக்கு பெயர் வைத்ததின் மூலம் மத்திய அரசு இந்தி திணிப்பை கொண்டு வந்துள்ளது என ஆதாரத்துடன் குற்றம் சுமத்தி உள்ளார்.
புதிய சட்டத்தில், 152வது பிரிவின் படி அரசுக்கு எதிராக பேசும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதியலாம் என, உள்ளது. புதிய சட்டங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, முதல்வர் இந்த சட்டங்களின் அடிப்படை பிரிவுகளில் உள்ள தவறுகளை திருத்தி, இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் வைத்துள்ளதை மீண்டும் ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய மாநில அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சட்ட வல்லுநர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது, மாநில இணைச் செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.