/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செஞ்சி சாலையில் ரூ.8.25 கோடியில் லாக்கிங் டைப் பிரிகாஸ்ட் 'கல்வெர்ட்' செஞ்சி சாலையில் ரூ.8.25 கோடியில் லாக்கிங் டைப் பிரிகாஸ்ட் 'கல்வெர்ட்'
செஞ்சி சாலையில் ரூ.8.25 கோடியில் லாக்கிங் டைப் பிரிகாஸ்ட் 'கல்வெர்ட்'
செஞ்சி சாலையில் ரூ.8.25 கோடியில் லாக்கிங் டைப் பிரிகாஸ்ட் 'கல்வெர்ட்'
செஞ்சி சாலையில் ரூ.8.25 கோடியில் லாக்கிங் டைப் பிரிகாஸ்ட் 'கல்வெர்ட்'
ADDED : ஜூலை 21, 2024 05:55 AM

புதுச்சேரி நகர பகுதி பிரஞ்சுக்காரர்களால் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு வீதியும் நேராக கடற்கரை நோக்கி அமைந்திருக்கும். இத்தகைய வீதிகளின் சாலையோர வடிகால் வாய்க்கால்கள் செஞ்சி சாலை ஆம்பூர் சாலை இடையில் ஓடும் பெரிய வாய்க்காலில் இணைக்கப்பட்டு உள்ளது.
செஞ்சி சாலையில் சோனாம்பாளையம் சந்திப்பு முதல் எஸ்.வி.பட்டேல் சாலை வரையில் உள்ள பகுதி நடுவில் 20 வடிகால் வாய்க்கால் பெரிய வாய்க்காலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்கால்களை மாற்றி புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் சார்பில், நபார்டு வங்கியில் பெற்ற ரூ. 8.25 கோடி கடன் மூலம், புதிய கல்வெர்ட்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
செஞ்சி சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும். இதனால் வழக்கமான பாணியில் கட்டுமான பணிகளை மேற்கொண்டால் வாய்க்கால் பணி பல மாதங்கள் வரை நடக்கும். இதனால் லாக்கிங் டைப் பிரிகாஸ்ட் கல்வெர்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து 'கல்வெர்ட்'கள் தயாரிக்கப்பட்டு தேங்காய்த்திட்டு பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வெர்ட்டுகளும் 10 முதல் 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. ஒரு கல்வெர்ட் அமைக்கும் பணி குறைந்தது 5 முதல் 10 நாட்களில் முடிக்கப்படும். இதனால் போக்குவரத்து பிரச்னைகள் குறைக்கப்படும். குடிநீர் குழாய், மின்சார கேபிள்கள் இருப்பதால், பிரிகாஸ்ட் கல்வெர்ட் அமைப்பு லாக்கிங் முறையில் அமைக்கப்படுவதாகவும், இப்பணிகள் நாளை 22ம் தேதி முதல் துவங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.