/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுநகர் விஷவாயுக்கு காரணம்: எம்.எல்.ஏ., புது குண்டு புதுநகர் விஷவாயுக்கு காரணம்: எம்.எல்.ஏ., புது குண்டு
புதுநகர் விஷவாயுக்கு காரணம்: எம்.எல்.ஏ., புது குண்டு
புதுநகர் விஷவாயுக்கு காரணம்: எம்.எல்.ஏ., புது குண்டு
புதுநகர் விஷவாயுக்கு காரணம்: எம்.எல்.ஏ., புது குண்டு
ADDED : ஜூலை 21, 2024 05:56 AM
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கடந்த மாதம் 11ம் தேதி பாதாள சாக்கடை வழியாக உருவான விஷவாயு தாக்கி பள்ளி சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். கனகன் ஏரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷவாயு வெளியேறியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
வீட்டின் கழிவறைகளில் வாட்டர் சீல் எனப்படும் எஸ் மற்றும் பி டிராப் பொருத்தாததால் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எஸ் மற்றும் பி டிராப் பொருத்தினர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மீண்டும் கடும் துர்நாற்றம் எழுந்ததால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். துர்நாற்றத்தை கட்டுப்படுத்த கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடையில் அடிக்கடி திறந்து விடப்படும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக விஷவாயு உருவாகி இருக்கலாம் என, தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே விஷவாயு தாக்கியது குறித்து சிவசங்கரன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'மூலக்குளம் குண்டு சாலை, பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனியார் நிலத்தில் 10க்கும் மேற்பட்ட போர்வெல் அமைத்துள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து வரும் டேங்கர் லாரிகள் அந்த இடத்திற்குள் சென்று, டேங்கர் லாரியில் உள்ள கழிவுகளை போர்வெல் மூலம் பூமிக்குள் செலுத்துகின்றனர். சில குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையிலும் திறந்து விடுகின்றனர். இதன் காரணமாக பாதாள சாக்கடையில் வேதி பொருட்கள் கலந்து, விஷவாயு உருவாகி இருக்கலாம். இது தொடர்பாக ஆய்வு செய்து விசாரிக்க கவர்னருக்கு கடிதம் அளித்துள்ளேன்' என கூறினார்.