/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இடைத் தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடல் இடைத் தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடல்
இடைத் தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடல்
இடைத் தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடல்
இடைத் தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடல்
ADDED : ஜூலை 10, 2024 04:33 AM

திருக்கனுார் : விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு திருக்கனுார் பகுதியில் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் ஏமாற்றமடைந்தனர்.
புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனுார் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அமைந்துள்ள சாராயக்கடை, மதுபான கடைகள் காலை முதலே தமிழக பகுதியைச் சேர்ந்த குடிமகன்களின் வருகையால் நிரம்பி வழிவது வழக்கம்.
இந்நிலையில் எல்லைப் பகுதியில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் இன்று (10ம் தேதி) இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, அத்தொகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், புதுச்சேரி பகுதிகளான திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, மணலிப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சாராயக்கடைகள், மதுபான கடைகள், ரெஸ்டோ பார்கள் ஆகியவற்றை நேற்று முன்தினம் (8ம் தேதி) முதல் இன்று (10ம் தேதி) வரை மூன்று நாட்கள் மூடுவதற்கு புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் முதல் திருக்கனுார் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குடிமகன்கள் ஏமாற்றமடைந்தனர். திருக்கனுார் எல்லைப் பகுதியில் மது கடைகள் மூடப்பட்டிருந்ததால் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.