/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 04:18 AM

புதுச்சேரி : ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த அறிக்கை:
ரேஷன் கடைகளே இல்லாத ஒரே மாநிலமாக புதுச்சேரி விளங்குவது மக்கள் விரோதச் செயல்.கடந்த காலங்களில் ஏன் இந்த அரிசி போடுவது நின்று போனது என்பது இன்றைய முதல்வருக்கும் ஊருக்கும் தெரியும். மத்திய அரசின் கொள்கை திணிப்புக்கு உடன்பட்டும் இக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டி விவாதங்களை கிளப்பி கண்டனங்களை அரசுக்கு முன் வைத்தனர். அதனை ஏற்ற முதல்வர், உடனடியாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் எனக் கூறியதை நிறைவேற்றவில்லை. இன்று பா.ஜ - என்.ஆர். காங்., இடையே நடக்கும் கூட்டணி சண்டை கூட பதவிக்காகவே தவிர ரேஷன் கடைகள் பற்றியது அல்ல. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டுஉடனடியாக ரேஷன் கடைகளை அரசு திறக்க வேண்டும். அத்துடன் மூடிக்கிடக்கின்ற கடைகளுக்கான வாடகை பாக்கியையும், ஊழியர்களின் சம்பள பாக்கியையும் தவணை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதி முக்கியமான இத்துறை முதலமைச்சரின் அதிகாரத்திற்குள் கொண்டு வந்தால் செயல்பாடு விரைவாக இருக்கும். தொடர்ந்து இந்த அரசு மெத்தனம் காட்டுமேயானால் மாநில அளவில் மட்டுமின்றி ஒவ்வொரு ரேஷன் கடைகள் முன்பாகவும் பொதுமக்களையும், ஊழியர்களையும் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.