/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேங்காய்த்திட்டில் ரூ. 55 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தேங்காய்த்திட்டில் ரூ. 55 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
தேங்காய்த்திட்டில் ரூ. 55 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
தேங்காய்த்திட்டில் ரூ. 55 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
தேங்காய்த்திட்டில் ரூ. 55 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
ADDED : ஜூலை 18, 2024 04:16 AM

அரியாங்குப்பம், : தேங்காய்த்திட்டு பகுதியில் 55 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய்திட்டு புதுநகர் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால், மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து, அப்பகுதிக்கு சிமென்ட் சாலை அமைக்க 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மேலாண் இயக்குனர் சிவக்குமார், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோ, செயற்பொறியாளர் பக்தவச்சலம் உட்பட அதிகாரிகள், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.