Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் விடுதலை

ADDED : மார் 14, 2025 04:28 AM


Google News
புதுச்சேரி: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி, காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

முதல்வர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம், கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை, உடனடியாக விடுவிக்க கேட்டுக்கொண்டார். அதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, விடுதலைக்கான சட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 10ம் தேதி இலங்கை மல்லாகம் நீதி மன்றம் 13 மீனவர்களையும் விடுதலை செய்தது. மேலும், யாழ்ப்பானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தமிழன் மற்றும் 12 மீனவர்களும் நேற்று யாழ்ப்பானத்திலிருந்து புறப்பட்டு இன்று நள்ளிரவு கொழும்பிற்கு வந்த சேரவுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் உள்ள இந்திய துாதரம் செய்து வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us