/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் மாஜி எம்.எல்.ஏ.,கோபிகா பாராட்டு மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் மாஜி எம்.எல்.ஏ.,கோபிகா பாராட்டு
மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் மாஜி எம்.எல்.ஏ.,கோபிகா பாராட்டு
மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் மாஜி எம்.எல்.ஏ.,கோபிகா பாராட்டு
மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் மாஜி எம்.எல்.ஏ.,கோபிகா பாராட்டு
ADDED : மார் 14, 2025 04:28 AM

புதுச்சேரி: பட்ஜெட் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பேணுவதற்கு பட்ஜெட்டில் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். குடும்ப தலைவிக்கு வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் உதவியை 2,500 ரூபாயாக முதல்வர் உயர்த்தி கொடுத்துள்ளார். இதன் மூலம் மகளிர் துயரங்களை துடைத்துள்ளார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பிரிவினருக்கும் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் ஓய்வூதியர்களின் துயரையும் துடைத்துள்ளார்.
முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட். பெண்கள், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் தொலைநோக்கு பார்வையுடன் பூர்த்தியும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.