/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சணல், தாம்பூல பைகள் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு சணல், தாம்பூல பைகள் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சணல், தாம்பூல பைகள் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சணல், தாம்பூல பைகள் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சணல், தாம்பூல பைகள் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 15, 2024 11:40 PM
புதுச்சேரி: இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், சணல் பைகள் மற்றும் தாம்பூல பைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு பல்வேறு வேலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சணல் பைகள் மற்றும் தாம்பூல பைகள் தயாரிப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
பயிற்சியில் சேர 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 13 நாட்கள் முழு நேர பயிற்சியில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. பயிற்சி வரும் 22ம் தேதி துவங்கப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு 8870497520, 0413 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.