/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு ஆன்சர் கீ வெளியீடு பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு ஆன்சர் கீ வெளியீடு
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு ஆன்சர் கீ வெளியீடு
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு ஆன்சர் கீ வெளியீடு
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு ஆன்சர் கீ வெளியீடு
ADDED : ஜூலை 16, 2024 04:58 AM
புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் பொது நுழைவு தேர்விற்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 2 அரசு செவிலியர் கல்லுாரிகள், 10 தனியார் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடாக, 484 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான பொது நுழைவு தேர்வு நேற்றுமுன்தினம் நடந்தது.
இதனை 1,952 பேர் தேர்வு எழுதினர். இந்த பொது நுழைவு தேர்விற்கான ஆன்சர் கீ https://health.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்த விடைகளில், ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் சென்டாக் இணைய தளத்தில் தங்களுடைய மொபைல்போன் டேஷ்போர்டு வாயிலாக இன்று 16ம் தேதி காலை 8 மணி வரை தெரிவிக்கலாம்.
சென்டாக் பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு பகுதி நுழைந்து, ஆன்சர் கீ லிங்கை திறந்து ஆட் மோர் ஆப்ஷன் வாயிலாக விடைகள் குறித்த ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.
சென்டாக் இணையதளம் மூலமாக தெரிவிக்கப்படும் விடைகள் ஆட்சேபனைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இ-மெயில், கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்த விடைத்தாள் ஆட்பேசனைகள் பரிசீலனை முடிந்ததும் சுகாதாரதுறையின் https://health.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.