ADDED : ஜூலை 07, 2024 03:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், பாபு ஜெகஜீவன்ராம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, லாஸ்பேட் ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள்., பாஸ்கர், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.