Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36 பேருக்கு ரூ.44 லட்சத்திற்கான ஆணை வழங்கல்

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36 பேருக்கு ரூ.44 லட்சத்திற்கான ஆணை வழங்கல்

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36 பேருக்கு ரூ.44 லட்சத்திற்கான ஆணை வழங்கல்

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36 பேருக்கு ரூ.44 லட்சத்திற்கான ஆணை வழங்கல்

ADDED : ஜூலை 14, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம், : குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மணவெளி தொகுதியில் 36 பயனாளிகளுக்கு 44 லட்சம் நிதி உதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.

தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு இதற்கான ஆணையை வழங்கினார். முதல் தவணையாக 28 பேருக்கு 1.20 லட்சம் வீதம் 33.60 லட்சம், இரண்டாவது தவணையாக 4 நபர்களுக்கு 1.60 லட்சம் வீதம் 6.40 லட்சம்,மூன்றாவது தவணையாக 4 நபர்களுக்கு 4 லட்சம் என, மொத்தம் 44 லட்சத்திற்கான அரசாணையை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி சுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் அனில் குமார், இளநிலை பொறியாளர்பாஸ்கர், களப் பணியாளர் மில்கிதாஸ், பா.ஜ., பிரமுகர் ஞானசேகரன், விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் சக்திபாலன் மாவட்ட தலைவர் சுகுமாரன் ஞானசேகர் முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us