/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் துார்வாரும் பணி ஆணையர் ஆய்வு வாய்க்கால் துார்வாரும் பணி ஆணையர் ஆய்வு
வாய்க்கால் துார்வாரும் பணி ஆணையர் ஆய்வு
வாய்க்கால் துார்வாரும் பணி ஆணையர் ஆய்வு
வாய்க்கால் துார்வாரும் பணி ஆணையர் ஆய்வு
ADDED : ஜூலை 14, 2024 05:20 AM

திருக்கனுார், : திருக்கனுாரில் 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியினை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை பருவமழைக்கு முன், துார்வாரி சாலைகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் தடுக்க கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி,திருக்கனுார் காலனி பகுதிகளில் உள்ள 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியினைஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க தனியார் நிறுவன ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.