/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச யோகா தின விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு சர்வதேச யோகா தின விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
சர்வதேச யோகா தின விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
சர்வதேச யோகா தின விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
சர்வதேச யோகா தின விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 22, 2024 05:04 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, இந்திய முறை மருத்துவம், ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசுக் கட்டுபாட்டுக் குழுமம் ஆகிய துறைகள் இணைந்து நடத்திய, 10-வது சர்வதேச யோகா தின விழா, கடற்கரை சாலையில், நேற்று காலை நடந்தது.
இந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி, தலைமை ஏற்று விழாவினைத் துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், செல்வ கணபதி எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ராஜூ, ஜவகர், ஜெயந்த குமார் ரே, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இதில், யோகா வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற 'பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி' நடந்தது. இந்த நிகழ்வில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த செயல் விளக்கத்தில், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமைச்செயலர் சரத் சவுகான் ஆகியோர் பங்கேற்று, யோகா பயிற்சி செய்தனர்.