/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலுார் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் கடலுார் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 22, 2024 05:03 AM
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார், கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளில் சிலர் சிறைக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் வேலை செய்து வருகின்றனர்.
அதன்படி, வெளியில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற 2 தண்டனை கைதிகள், 3 விசாரணை கைதிகள் சிப்ஸ் மற்றும் ஊறுகாய் பாக்கெட்டுகளை வாங்கி சிறைக்குள் கொண்டு வந்தனர். அதனை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். அதில் ஆத்திரமடைந்த 5 கைதிகளும் நேற்று காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டடனர். அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.