/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மறுவாழ்வு மையம் துவக்கம் வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மறுவாழ்வு மையம் துவக்கம்
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மறுவாழ்வு மையம் துவக்கம்
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மறுவாழ்வு மையம் துவக்கம்
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மறுவாழ்வு மையம் துவக்கம்
ADDED : ஜூலை 15, 2024 02:19 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நரம்பியல் துறையில், பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன இயந்திரங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
மருத்துவமனை இயக்குனர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் லோகநாதன், பொதுமேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரம்பியல் துறை டாக்டர் தெலுங்கானா வரவேற்றார்.
வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயற்கை அதிகாரி வித்யா புதிய மையத்தை திறந்து வைத்தார்.
மறுவாழ்வு மையத்தில் பக்கவாத நோயாளிகள், நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு பாதிப்பு, பெருமூளை வாதம், கை, கால் வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அதிநவீன கருவிகளின் உதவியால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவ கல்லுாரி பல்வேறு துறைகளைச் சார்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.