/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு முதல்வர், அமைச்சர்கள் மீது சராமரி குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு முதல்வர், அமைச்சர்கள் மீது சராமரி குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு முதல்வர், அமைச்சர்கள் மீது சராமரி குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு முதல்வர், அமைச்சர்கள் மீது சராமரி குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு முதல்வர், அமைச்சர்கள் மீது சராமரி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 15, 2024 02:19 AM
புதுச்சேரி: பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து, முதல்வர், அமைச்சர்கள் மீது சராமரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் பிறகு முதல்வர், அமைச்சர்கள் மீது பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ள சீனிவாஸ் அசோக், நியமன எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தொடர்ந்து முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த அவர்கள், பா.ஜ., தேசிய தலைவர்கள் நட்டா, சந்தோஷை சந்தித்து முறையிட்டனர்.
அடுத்து பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களிடம் சந்தித்து சமாதானப்படுத்தினார்.
சமாதானமாகாத பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். இதற்கிடையில் லோக்சபா தேர்தல் தோல்வி எதிரொலியாக பா.ஜ., சிறப்பு செயற்குழு நேற்று கூட்டப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி கலந்து கொண்டார்.
முன்னாதாக சன்வே ஓட்டலில், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மத்திய அமைச்சரை கிஷன் ரெட்டியை ஒன்றாக சந்தித்து பேசினர். அப்போது, முதல்வர், அமைச்சர்கள் மீது மீண்டும் சராமரியாக குற்றச்சாட்டுகளை கூறினர்.
ஆட்சியின் செயல்பாடு சரியில்லை. முதல்வர் எதிர்கட்சிகள், அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தான் அனைத்தையும் செய்கிறார்.
இதனால் லோக்சபா தேர்தலில் தோல்வி தான் ஏற்படும் என்று ஏற்கனவே கடிதம் எழுதி எச்சரித்து இருந்தோம்.
அதன்படி தான் நடந்தது. தோல்விக்கு பிறகு கூட அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,விற்கு பின்னடைவு தான் ஏற்படும்.
பா.ஜ., அமைச்சர்களை மாற்றுவதோடு, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக கட்சியின் மேலிடத்திற்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கும் கொண்டு செல்வதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்தார்.