Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் தனிஷ்க் நிறுவனத்தின் மியா ஜூவல்லரி திறப்பு விழா

புதுச்சேரியில் தனிஷ்க் நிறுவனத்தின் மியா ஜூவல்லரி திறப்பு விழா

புதுச்சேரியில் தனிஷ்க் நிறுவனத்தின் மியா ஜூவல்லரி திறப்பு விழா

புதுச்சேரியில் தனிஷ்க் நிறுவனத்தின் மியா ஜூவல்லரி திறப்பு விழா

ADDED : ஜூன் 15, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் தனிஷ்க் மியா ஜூவல்லரி புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நவநாகரீக நகை விற்பனையில் முன்னணி வகிக்கும் தனிஷ்க் நிறுவனம், தனது முதல் பிரத்யேக ஜூவல்லரியை, தனிஷ்க் மியா எனும் பெயரில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லுாரி எதிரே அமைத்துள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர்கள் சுரேஷ் சோமானி, அர்ச்சனா சோமானி மற்றும் மணீஷ் சோமானி, ஜோதி சோமானி, தென்மண்டல வர்த்தக மேலாளர் அரவிந்த் ஆகியோருடன் தனிஷ்க் வணிகத் தலைவர் மிருணாள் மாஜி திறந்து வைத்தார்.

இந்த மியா ஜூவல்லரியில் நவநாகரீக மற்றும் சமகால நகைகள் 14 கேரட் மற்றும் 18 கேரட் வடிமைப்பில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. துடிப்பான வண்ண கற்கள், திகைப்பூட்டும் தங்கம், தீப்பொறி வைரம் மற்றும் பளபளக்கும் வெள்ளி ஆகியவை மியாவின் மிக நேர்த்தியான நகைகளில் தனித்துவமானவை. இவை அனைத்துமே விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. காதணிகள், ஸ்டுட்கள், மோதிரங்கள், வளையல்கள் விரும்பிய டிசைன்களில் வாங்கலாம்.

திறப்பு விழாவையொட்டி மியா தயாரிப்புகளுக்கு 20 சதவீதம் வரையிலான தள்ளுபடியை மியா அறிவித்துள்ளது. இந்த சலுகை நாளை 16ம் தேதி வரை பொருத்தும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் காஸ்மோஸ் எல்லாவற்றிலும் ஈர்க்கப்பட்டு 14 கேரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட டிசைன்களை காட்சிப்படுத்தியுள்ள தனிஷ்க் நேர்த்தியான ஸ்டார்பர்ஸ்ட் சேகரிப்பு மியாவில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு வைத்துள்ளது.

திறப்பு விழாவில் தனிஷ்க் வணிகத் தலைவர் மிருணாள் மாஜி கூறுகையில், 'இன்றைய பெண்களின் தேவையையும் அவர்கள் நகைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டு தனிஷ்க் மியா அனைத்தையும் தேடி பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எடை குறைவான, அதே நேரத்தில் அசத்தலான நகைகள் இவை. அனைத்துமே தனித்துவமானவை. கலாசாரம் தாக்கம் நிறைந்த புதுச்சேரி நகரத்தில் எங்களின் நகைகள் அனைவருக்குமே பிடிக்கும். வந்து உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளுங்கள்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us