/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு போத்தீஸ் நிறுவனத்தில் ரத்த தான முகாம் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு போத்தீஸ் நிறுவனத்தில் ரத்த தான முகாம்
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு போத்தீஸ் நிறுவனத்தில் ரத்த தான முகாம்
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு போத்தீஸ் நிறுவனத்தில் ரத்த தான முகாம்
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு போத்தீஸ் நிறுவனத்தில் ரத்த தான முகாம்
ADDED : ஜூன் 15, 2024 04:45 AM

புதுச்சேரி: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு போத்தீஸ் நிறுவனத்தில் ரத்த தானம் முகாம் நடந்தது.
போத்தீஸ் ஜவுளி நிறுவனம், தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. போத்தீஸில் துணிகள் மட்டுமின்றி அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் விற்கப்படுவது சிறப்பு அம்சம்.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உடல் நலத்தினை பேணும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.
போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன் தலைமை தாங்கி பேசுகையில், 'புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு போத்திஸ் நிறுவனம் சேவையாற்றி வருகிறது.
சமூக பொறுப்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ரத்த தானம் செய்வதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றலாம்.
ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். உதிரம் கொடுத்து உயிர்காப்போம்' என்றார்.
தொடர்ந்து நடந்த முகாமில், போத்தீஸ் ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர். ரத்தம் சேகரித்த ஆரம்ப சுகாதார மைய டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ரத்த தானம் செய்வதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
முகாம் ஏற்பாட்டினை பொது மேலாளர் பாலமுருகன், மனித வள மேலாளர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.