ADDED : ஜூன் 04, 2024 11:49 PM
புதுச்சேரி: கொடுத்த கடனை திருப்பி கேட்ட டிரைவரை கட்டையால் தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
முதலியார்பேட்டை தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 38; டிரைவர். அதே பகுதியை சேர்ந்த முரளி மெக்கானிக் இவர், மணிகண்டனிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனை பல முறை கேட்டும் முரளி தராமல் காலம் கடத்திவந்தார்.
நேற்று பணத்தை தருகிறேன் எனக் கூறி ஒர்ஷாப்புக்கு மணிகண்டனை வரசொன்னார். அங்கு சென்ற மணிகண்டனை, முரளி மற்றும் சிலர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து முரளி மற்றும் சிலரை தேடிவருகின்றனர்.