/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ரவுடி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது புதுச்சேரி ரவுடி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
புதுச்சேரி ரவுடி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
புதுச்சேரி ரவுடி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
புதுச்சேரி ரவுடி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஜூன் 04, 2024 06:36 AM

கடலுார், : புதுச்சேரி ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெயபிரகாஷ்,28; இவர், கடந்த 22ம் தேதி பண்ருட்டி அடுத்த எம்.புதுப்பாளையத்தில் பைக்கில் சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் வழமறித்து வெட்டி கொலை செய்ய முயன்றது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து புதுச்சேரி மாநிலம் வில்லியனுார், கணுவாபேட்டையைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் நுாதேஷ்,21; வினோத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இதில் நுாதேஷ் மீது புதுச்சேரி மற்றும் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன்களில் ரவுடி பட்டியல் பராமரிப்பதும், அவர் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்ளது தெரிய வந்தது.
இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாரம் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் அருண் தம்புராஜ், நுாதேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலார் மத்திய சிறையில்உள்ள நுாதேஷிடம் நேற்று பண்ருட்டி போலீசார் வழங்கினர்.