/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.சி.சி., மாணவர்களின் 302 கி.மீ., துார பாய்மர படகு கடல் சாக பயணம் நிறைவு விழா கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு என்.சி.சி., மாணவர்களின் 302 கி.மீ., துார பாய்மர படகு கடல் சாக பயணம் நிறைவு விழா கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
என்.சி.சி., மாணவர்களின் 302 கி.மீ., துார பாய்மர படகு கடல் சாக பயணம் நிறைவு விழா கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
என்.சி.சி., மாணவர்களின் 302 கி.மீ., துார பாய்மர படகு கடல் சாக பயணம் நிறைவு விழா கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
என்.சி.சி., மாணவர்களின் 302 கி.மீ., துார பாய்மர படகு கடல் சாக பயணம் நிறைவு விழா கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
ADDED : ஜூன் 18, 2024 05:04 AM

புதுச்சேரி: என்.சி.சி., மாணவர்களின் 302 கி.மீ., துார பாய்மர படகு சாகச பயணம் நிறைவு விழாவில் கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
புதுச்சேரி என்.சி.சி., தலைமையகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் என்.சி.சி., கடற்படை பிரிவு சார்பில் பாய்மர படகு கடல் சாகச நிகழ்ச்சி நடத்தப்படும்.
அதன்படி, இந்தாண்டு சமுத்திர சக்தி என்ற பெயரில் கடல் சாகச பயணம் கடந்த 7ம் தேதி துவங்கியது. 35 மாணவர்கள், 25 மாணவிகள், 11 என்.சி.சி., அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பாய்மர படகுகள் மூலம் தேங்காய்த்திட்டு துறைமுகம் துவங்கி, கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்று மீண்டும் அதே வழியாக 302 கி.மீ., பயணம் செய்து புதுச்சேரி திரும்பும் சாகச பயண நிறைவு விழா தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நேற்று நடந்தது.
கவர்னர் ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து படகுகளை வரவேற்றார். நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., உதவி தலைமை இயக்குநர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி, என்.சி.சி., மாணவர் படை குருப் கமாண்டர் மேனன், கமான்டிங் அதிகாரி அருண்நாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சாகச பயணத்தால் மாணவர்களின் மனவலிமை, உடல் வலிமை மேம்பட்டிருக்கும். மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்க கூடிய மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்தி கொள்ள உதவியாக இருந்திருக்கும்.
மாணவர்கள் கடற்கரை துாய்மை, மரம் நடுதல், ரத்த தானம், போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டது பாராட்டிற்கு உரியது.
போதை பொருள் பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரியாக மாறி உள்ளது.
இவற்றை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
போதை பொருள் குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படாத வரை அதை முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியமில்லை என கூறினார்.