ADDED : ஜூன் 11, 2024 11:45 PM

பாகூர் : கிருமாம்பாக்கம் ஊரக்குளம் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் 45; பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில், வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணி செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.
இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வில்லியனுாரில் வசிக்கின்றனர். தனியாக வசித்து வந்த கதிரேசன், கடந்த 7ம் தேதி இரவு 10:00 மணிக்கு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கோவிந்தன், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.