ADDED : ஜூலை 11, 2024 04:31 AM
புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் விஜய: கணபதி. இவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் கேம் விளையாடி, அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறினார்.இதை நம்பி, விஜயகணபதி ஆன்லைனில் கேம் விளையாட, 50 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
லாஸ்பேட்டையைசேர்ந்த தினேஷ் பாபுவின் கிரெடிட் கார்டில் இருந்து, 83 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. ரெட்டியார் பாளையத்தைசேர்ந்த அந்தோணி, தனதுமொபைலுக்கு வந்த,'லிங்க்'கை, கிளிக் செய்து,வங்கி விவரங்கள், கடவுச்சொல்லைபதிவு செய்தார். சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து, 2.46 லட்சம் ரூபாய் காணாமல் போனது.
உப்பளத்தைசேர்ந்த ராதிகா குறைந்த வட்டியில் லோன் வாங்க, ரூ.29 ஆயிரத்து, 500 முன்பணம் கட்டி ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்த தினேஷ்குமார் 38 ஆயிரம், அதே பகுதியை சேர்ந்ததிவ்யா பாரதி 28 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் ஏமாந்தனர்.இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.