/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு
தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு
தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு
தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு
ADDED : ஜூலை 11, 2024 04:30 AM
புதுச்சேரி, : புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள், சீனியர் எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி லோக்சபா தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடந்தது.
வாக்காளர் பங்கேற்பு 78.90 சதவீதமாக இருந்தது. இந்த தேர்தலில் நடந்து சென்று ஓட்டளிப்போம், தவறான தகவலுக்கு எதிரான பிரசாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச போக்குவரத்து, மாதிரி ஓட்டுச்சாவடிகள், அணுகக்கூடிய ஓட்டுசாவடிகள் போன்ற பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.
தேர்தல் இயந்திரத்தின் மகத்தான பங்களிப்பினை பாராட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சீனியர் எஸ்.பி.,களுக்கு பாராட்டு கடிதங்களை எழுதியுள்ளார்.
புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் சரத் சவுகான், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சீனியர் எஸ்.பி.,களுக்கு பாராட்டு கடிதங்களை நேற்று வழங்கினார்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.