ADDED : ஜூன் 11, 2024 11:22 PM
புதுச்சேரி : சரக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை வி.ஓ.சி., நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி, 49; சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் தொந்தரவு அதிகமானதால், பத்மாவதிக்கு தொந்தரவு ஏற்படவே நேற்று முன்தினம் இரவு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து, பத்மாவதி வலது காலில் உள்ள விரலை அகற்ற பரிந்துரை செய்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்த பத்மாவதி நேற்று அதிகாலை வீட்டில் உள்ள சமையல் அறை மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.