Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பல்கலையில் சேர 22ல் திறனறி தேர்வு

பாரதியார் பல்கலையில் சேர 22ல் திறனறி தேர்வு

பாரதியார் பல்கலையில் சேர 22ல் திறனறி தேர்வு

பாரதியார் பல்கலையில் சேர 22ல் திறனறி தேர்வு

ADDED : ஜூன் 18, 2024 04:44 AM


Google News
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூடத்தில் நிகழ்கலை மற்றும் நுண்கலை படிப்பில் சேர திறனறி தேர்வு வரும் 22ம் தேதி நடக்கிறது.

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் அன்னப்பூரணி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு திறனறி தேர்வு நடக்கிறது. முன்பாக காலை 9:00 மணிக்கு முதல்வர் அலுவலகத்தில் தேர்வர்கள் ஆஜராக வேண்டும்.

இந்த தேர்வில், பி.பி.ஏ., இசை மற்றும் நடன விண்ணப்பதாரர்களுக்கான திறனறி தேர்வில் அவர்களின் செயல் திறன் மதிப்பெண் பட்டியலிடப்படும்.

சென்டாக் வழங்கிய பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கல்லுாரியில் பெற்ற மதிப்பெண் இறுதிப்பட்டியல் இறுதி செய்ய எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இளங்கலை நுண்கலை (பி.எப்.ஏ.) சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் ஓவியம், சிற்பம், பயன்பாட்டு கலை மற்றும் வடிவமைப்பு ஆகிய 4 சிறப்பு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

இசையில், இளங்கலை, நிகழ்கலை (பி.பி.ஏ.) சேர்க்கைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தவில், நாதஸ்வரம் ஆகிய 6 சிறப்பு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

நடனத்தில் இளங்கலை, நிகழ்கலை சேர்க்கைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு பாரதநாட்டியம் முககிய பாடமாக ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us