ADDED : ஜூலை 15, 2024 02:09 AM
நெட்டப்பாக்கம்: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், வாழை விவசாயிகளுக்கு நுண்ணுாட்டச் சத்து இடுதல் குறித்த செயல் விளக்கம் ஏம்பலம் கிராமத்தில் அளிக்கப்பட்டது.
வேளாண் அலுவலர் தினகரன், வாழையில் அதிக மகசூல் பெறுவதற்கு நுண்ணுாட்டச்சத்து கொடுப்பது குறித்து விளக்கினார்.
ஏம்பலம், நத்தமேடு, செம்பியப்பாளையம் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு 5 கிலோ நுண்ணுாட்டச்சத்து பவுடர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அலுவலக ஊழியர் தம்புசாமி செய்திருந்தார். மருத்துவர் செல்வமுத்து நன்றி கூறினார்.