/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு மாஜி மாணவர்கள் பரிசளிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மாஜி மாணவர்கள் பரிசளிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாஜி மாணவர்கள் பரிசளிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாஜி மாணவர்கள் பரிசளிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாஜி மாணவர்கள் பரிசளிப்பு
ADDED : ஜூன் 15, 2024 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கினர்.
புதுச்சேரி எஸ்.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில், எஸ்.ஆர்.எஸ் 90'எஸ் வாட்ஸ்ஆப் குழுவின் சார்பில், கடந்தாண்டில் இருந்து பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டாம் ஆண்டாக அந்த பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முறையே, ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசை, முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, மஞ்சினி ஆகியோர் ரொக்கப் பரிசையும், பாராட்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி மாணவர்களை பாராட்டினர்.
எஸ்.ஆர்.எஸ் 90'எஸ் வாட்ஸ்ஆப் குழுவின் உறுப்பினர்கள், பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.