ADDED : ஜூன் 15, 2024 05:29 AM

புதுச்சேரி: கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்கள், உலக ரத்த தான உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
கோரிமேடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக ரத்த தானம் செய்வோர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்வில், சுகாதார உதவியாளர் சிவக்குமார் வரவேற்றார்.
ஹோமியோ மருத்துவர் அருணாச்சலம், பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி, சுகாதார ஆய்வாளர் லியோனா முன்னிலை வகித்தனர்.
நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா, ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். செவிலிய அதிகாரி பானு, உறுதி மொழியை வாசிக்க, கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர். சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.