/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 02, 2024 11:11 PM

வில்லியனுார் : வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். வேளாண் பயிற்றுனர் விநாயகம் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார்.
பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேல்முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் பாமகள் கவிதை, மாணவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் நோய்கள் குறித்து பேசினார்.
அதனை தொடர்ந்து வேதியியல் விரிவுரையாளர் முரளி, மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், போதையில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் குறித்து பேசினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி விரிவுரையா ளர்கள் செல்வன், வித்யா, லதா, ராஜேஷ், ரேவதி, அருட்செல்வி, தேவிபாலா மற்றும் ரவிசங்கர் ஆகியோர் செய்தனர். விழாவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் இறைவானம் நன்றி கூறினார்.