Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பம் பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் 'கட்'

அரியாங்குப்பம் பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் 'கட்'

அரியாங்குப்பம் பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் 'கட்'

அரியாங்குப்பம் பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் 'கட்'

ADDED : ஜூலை 09, 2024 04:57 AM


Google News
புதுச்சேரி, : அரியாங்குப்பம் பகுதியில் நாளை மற்றும், நாளைமறுதினம் குடிநீர் விநியோகம் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அரியாங்குப்பம் இ.சி.ஆர்., மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை 10ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.

இதே போல், அரியாங்குப்பம் ஆர்.கே நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, நாளை மறுநாள் 11ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us