/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டு எண்ணிக்கை குறித்து தி.மு.க., ஆலோசனை ஓட்டு எண்ணிக்கை குறித்து தி.மு.க., ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை குறித்து தி.மு.க., ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை குறித்து தி.மு.க., ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை குறித்து தி.மு.க., ஆலோசனை
ADDED : ஜூன் 02, 2024 04:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் லோக் சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தி.மு.க., தலைமை அலுவகலத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்திற்கு தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட செயலாளர்கள், தி.மு.க மற்றும் 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில், தி.மு.க தலைமை அலுவலகத்தில், மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் சட்டத்துறைச் செயலாளர் இளங்கோ எம்.பி., ஓட்டு எண்ணிக்கையின் போது, தலைமை முகவர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.