ADDED : ஜூன் 18, 2024 11:58 PM
புதுச்சேரி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி சுகுணா, 35; இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மூளை வளர்ச்சி தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனையில் காண்பித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல், கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த சுகுணா, வீட்டு அறையில் துாக்குபோட்டு கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அறை கதவை உடைத்து, அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.