ADDED : ஜூன் 18, 2024 11:57 PM
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டில் குடிபோதையில், கூலி தொழிலாளியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான மதுரப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திங்களனி, 34; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மண்ணாடிப்பட்டில் அமைந்துள்ள தனியார் ரெஸ்டோ பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த மண்ணாடிப்பட்டை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திங்களனியை திட்டி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திங்களனி அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.