/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
ADDED : ஜூன் 24, 2024 04:58 AM

கச்சிராயபாளையம், : கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமுருகன்,45; கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்.
இதையறியாத அவரது உறவினர்கள், ஜெயமுருகன் உடலை அடக்கம் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கியது. அதையடுத்து, ஜெயமுருகனும் கள்ளச்சாராயம் குடித்துதான் இறந்தார். அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி தாசில்தார் கமலக்கண்ணன் மற்றும் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், நேற்று காலை மாதவச்சேரி மயானத்தில் புதைக்கப்பட்ட ஜெயமுருகனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.