/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்கள் கிரிக்கெட் போட்டி டைமண்டஸ், ஏஞ்சல்ஸ் அணிகள் வெற்றி பெண்கள் கிரிக்கெட் போட்டி டைமண்டஸ், ஏஞ்சல்ஸ் அணிகள் வெற்றி
பெண்கள் கிரிக்கெட் போட்டி டைமண்டஸ், ஏஞ்சல்ஸ் அணிகள் வெற்றி
பெண்கள் கிரிக்கெட் போட்டி டைமண்டஸ், ஏஞ்சல்ஸ் அணிகள் வெற்றி
பெண்கள் கிரிக்கெட் போட்டி டைமண்டஸ், ஏஞ்சல்ஸ் அணிகள் வெற்றி
ADDED : ஜூலை 19, 2024 04:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி பெண்கள் கிரிக்கெட் போட்டியில், டைமண்ட்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில் ஏஞ்சல்ஸ், குயின்ஸ், பிரின்சஸ், டைமண்ட்ஸ் ஆகிய நான்கு அணிகள் மோதும், 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி, சி.ஏ.பி.சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று காலை நடந்த போட்டியில், குயின்ஸ் மற்றும் டைமண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய, குயின்ஸ் அணி, 20 ஓவர்களில், 1 விக்கெட் மட்டும் இழந்து, 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் யாஷி பாண்டே, 44 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய டைமண்ட்ஸ் அணி 19.1 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, 124 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் 'த்ரில்லிங்' வெற்றி பெற்றது. டைம ண்ட்ஸ் அணியின் மைத்ரேயீ, 26 பந்துகளில் 34 ரன்கள் அடித்து, ஆட்டம் இழக்காமல் வெற்றிக்கு வழி வகுத்து ஆட்டநாயகி விருது வென்றார்.
மதியம் நடந்த போட்டியில், பிரின்சஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரின்சஸ் அணி, 19.4 ஓவர்களில், 106 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் யுவஸ்ரீ 40 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து ஆடிய ஏஞ்சல்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து, 107 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், 27 பந்துகளில், 33 ரன்களும், 2 விக்கெட்டுகளும் எடுத்த, ஏஞ்சல்ஸ் அணியின் ஷிவி பாண்டே ஆட்டநாயகி விருது பெற்றார்.